உள்நாடு

கடந்தாண்டுக்கான க.பொ.த.சாதாரண தர பரீட்சை இன்று

(UTV | கொழும்பு) – கொவிட்19 பரவலுக்கு மத்தியில் பிற்போடப்பட்டிருந்த கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இன்று(01) ஆரம்பமாகியது.

நாடளாவிய ரீதியில் 4,513 பரீட்சை நிலையங்களில் இடம்பெறும் கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்காக 622,352 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அத்துடன் பரீட்சைக்கு தோற்றும் மாணவருக்கு கொவிட் 19 தொற்றுறுதியானால் அதற்காக முன் ஆயத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது இரண்டு மேலதிக பரீட்சை நிலையங்களை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் அனைத்து பரீட்சை நிலையங்களிலும் தொற்று நீக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இன்று ஆரம்பமாகிய பரீட்சைக்காக கொவிட் 19 தொற்றுறுதியான 25 மாணவர்கள் தோற்றவுள்ளதுடன், அவர்களுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

கொரோனா : மேலும் 09 பேர் பலி

ட்ரோன் கமரா கண்காணிப்பில் 7 பேர் கைது

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

editor