(UTV | சிலாபம்) -இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ பயணித்த ஜீப் வண்டி பள்ளம – சேருகெலே பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதியதில் சாரதி உட்பட மூவர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.