உள்நாடு

கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை 76,000 ஐ கடந்தது

(UTV | கொழும்பு) – நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் 774 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகினதையடுத்து இந்த எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொவிட் 19 தொற்றுறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 76,428 ஆக உயர்வடைந்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 764 பேரும், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 10 பேரும் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 72, 401 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 6,614 கொவிட் 19 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கொரோனா மரணங்கள் 06 பதிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை – பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி

editor

வௌ்ளைவேன் – சந்தேக நபர்களிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம்

‘பெருநாளிலிருந்தாவது பெருவாழ்வு சிறக்கட்டும்’