உள்நாடு

2ம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டவர்களுக்கான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையினை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

மூன்று மாதங்களின் பின்னர் இரண்டாவது தடுப்பூசியை செலுத்துவதன் ஊடாக உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சாத்தியமுள்ளமை ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது தடுப்பூசியை செலுத்தி ஒரு மாத காலத்தின் பின்னர் அடுத்த தடுப்பூசியை செலுத்த எதிர்ப்பார்த்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த வாரம் இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு

விலை குறைப்பு தொடர்பில் மகிழ்ச்சியான தகவலை வெளியிட்ட அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

எரிபொருள் நெருக்கடியினை சமாளிக்க அரசுக்கு யோசனைகள் முன்வைப்பு