(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பான பிரதமரின் அறிவிப்பு நிபுணர்களின் பரிந்துரைப்படியே தெரிவித்திருக்க வேண்டுமெனவும் அவரின் கருத்து சட்டமல்ல எனவும் அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஹரித அலுத்கே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொவிட் -19 தொடர்பாக உலகெங்கிலும் உள்ள நடைமுறைகளை அவதானித்தால், வெளிநாடுகளில் கடுமையான நிபந்தனைகளின் கீழ் அடக்கம் செய்வது பிரச்சினைக்கான தீர்வாக கருதப்படலாம்.
பிரதமர் தெரிவித்திருப்பது சட்டம் அல்ல என்றும், இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னரே இந்த முடிவை செயல்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.