உள்நாடு

கொவிட் தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கு விசேட பரீட்சை நிலையங்கள்

(UTV | கொழும்பு) – 2020 கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் கொரோனா தொற்றுக்குள்ளான மாணவர்களின் நலன் கருதி மாட்ட ரீதியில் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் இந்த பரீட்சை நிலயைங்களில் பரீட்சை எழுதலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுய-தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து பரீட்சை நிலையங்களிலும் மேலதிக பரீட்சை வகுப்பறையினை தயார் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை எதிர்வரும் மார்ச் 01 முதல் 11 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

பிரேமலால் ஜயசேகரவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

திருடர்களை எப்பொழுதும் பிடிக்கலாம் – ஜனாதிபதி ரணில்

editor

கோமாளிகளின் கூடாரமாக மாறிய இலங்கையின் பாராளுமன்றம் – சிவஞானம் சிறிதரன்.