(UTV | கொழும்பு) – பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் எஸ்ட்ரா செனெகா கொவிட்-19 தடுப்பூசியை, கொவிட் பரவல் உள்ள நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுக்கும் பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கும் அந்த தடுப்பூசியை பரிந்துரைப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும், ஜேர்மனி மற்றும் ப்ரான்ஸ் முதலான நாடுகள், 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு எஸ்ட்ராசெனகா தடுப்பூசியை பயன்படுத்தாதிருக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.