உள்நாடு

‘கொழும்பு கடற்படை பயிற்சி 2021’ ஆரம்பம்

(UTV | கொழும்பு) – இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ´கொழும்பு கடற்படை பயிற்சி 2021´ கடந்த 7ம் திகதி மூன்றாவது வருடமாகவும் வெற்றிகரமாக ஆரம்பமானது.

வருடந்தோறும் கடற்படையினரால் முன்னெடுக்கப்படும் இணைந்த கூட்டுப்பயிற்சியின் மூலமாக கடற்படை பிரிவுகளின் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடல்சார் சூழலில் கடற்படை மற்றும் விமானப்படையின் யுத்த தளவாடங்களை என்பன ஒருங்கிசைவாக பயன்படுத்தும் முறைமைகள் இந்த இணைந்த கூட்டுப்பயிற்சியில் கையாளப்படவுள்ளது.

இதுபோன்ற சிறப்பு கூட்டு பயிற்சிகளின் மூலமாக படை நடவடிக்கைகளுக்காக தயார் நிலையில் இருத்தல் மற்றும் இரு படைகளினதும் பயிற்சி திறன்களை மேம்படுத்துதல் அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைக்கு உரித்தான கடல் பிராந்தியங்களின் பாதுகாப்பினை நிலையாக வைத்திருப்பதற்காக கடற்படை மற்றும் விமானப்படைக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வை விருத்தி செய்தல் என்பன இலக்காக கொள்ளப்படுகின்றது.

இக்கடற்படை பயிற்சியில் கடற்படையின் ஆழ்கடல் ரோந்து கப்பல்களான ´சயுறல´, ´சயுர´,’சிந்துரல’, மற்றும் ´சமுத்ரா´ அதிவிரைவு தாக்குதல் கப்பல்களான ´சுரனிமல´ மற்றும் ‘நந்தமித்ர’ கரையோர ரோந்து கப்பல்களான ´மிஹிகத´, ´ரத்னதீப´ விரைவு தாக்குதல் படகான ‘உதார’வும் கடலோர பாதுகாப்பு படையின் ´சுரக்ஸா ´, ´சமுத்ராரக்ஷா´ மற்றும் சமாரக்ஷா ஆகிய கப்பல்களும் இலங்கை விமானப்படையின் எம்ஐ 17, பெல் 412 மற்றும் பெல் 212 உலங்குவானூர்திகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக பி-200 ரக விமானமும் இப்பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றுகின்றன.

இந்த அனைத்து பயிற்சி நடவடிக்கைகளும் கொவிட்-19 பரவலை தடுப்பதற்காக சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மலேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை இளைஞன்

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை தோல்வி