உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 34 நிறுவனங்கள் சிக்கின

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி செயற்பட்ட மேலும் 34 நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் காணப்படும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் நேற்று(04) முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது குறித்த நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அரச மற்றும் தனியார் துறையினை உள்ளடக்கிய வகையில் மேல் மாகாணத்தில் காணப்படும் 642 நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்போது அவற்றுள் 608 நிறுவனங்களில் உரிய முறையில் சுகாதார வழிகாட்டுதல்கள் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளதுடன் 34 நிறுவனங்களில் சுகாதார வழிகாட்டுதல்கள் தவிர்த்து செயற்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசா நிதியத்திற்கு, 40 மில்லியனை வழங்கிய பேருவளை மக்கள்

தொடர்ந்தும் ஊரடங்கு அமுலுக்கு

நாளை விசேட அமைச்சரவைக் கூட்டம்