விளையாட்டு

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான தொடர் தற்காலிகமாக ஒத்திவைப்பு

(UTV | கொழும்பு) – மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை அணி பங்கேற்கவிருந்த கிரிக்கெட் தொடரை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் அணியின் வீரர் லஹிரு திரிமன்னவிற்கும் கொவிட் 19 தொற்றுறுதியான நிலையில் ஏனைய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை அணி எதிர்வரும் 18 ஆம் திகதி மேற்கிந்திய தீவுகளுக்கு செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டாவது டி-20 போட்டியில் நியூஸிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று

பிரபல கிரிக்கெட் வீரர் விபத்தில் உயிரிழப்பு