வணிகம்

RPCsஇனால் இணைக்கப்பட்ட உற்பத்தித் திறன் ஊதியத் திட்டத்திற்கு தொழில் அமைச்சர் பச்சைக்கொடி

(UTV | கொழும்பு) – தொழில் அமைச்சர் கௌரவ நிமல் சிரிபால டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க, பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாள் ஒன்றுக்கு ரூபா. 1,108 வரை தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்குவதற்கான திருத்தப்பட்ட ஊதிய முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது.

திருத்தப்பட்ட முன்மொழிவானது தொழில் அமைச்சருடனான பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட தீர்வின் விளைவாகும். எனினும், தொழிற்சங்கங்கள் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானம் தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையான 1000 ரூபாவை விட அதிகமாக வருவாயைப் பெற்றுக் கொள்ளக் கூடியதை உறுதி செய்வதுடன், மேலும் இறுதியாக உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான வெகுமதியையும் அளிக்கும்.

1,108 ரூபா நாள் சம்பளம் பின்வரும் முறைமையின் அடிப்படையாகக் கொண்டது: அடிப்படை சம்பளம் 725 ரூபா, விலை பங்கு துணை 50 ரூபா, ஊழியர் சேமலாப நிதி / ஊழியர் நம்பிக்கை நிதி (EPF/ETF)) 108 ரூபா மற்றும் வருகை மற்றும் உற்பத்தித் திறன் ஊக்குவிப்புத் தொகை 225 ரூபாவும் இந்த புதிய ஊதிய முன்மொழிவு யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

ஒரு நிலையான தினசரி ஊதிய மாதிரியானது வாரத்தில் 3 நாட்களுக்கு பொருந்தும். மீதமுள்ள நாட்களில் உற்பத்தித் திறனுடன் இணைக்கப்பட்ட இரண்டு வருவாயை அதிகரிக்கும் மாதிரிகளில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு ஊழியர்கள் ஊதியம் பெறுவார்கள் – அதில் ஒன்று பறிக்கப்பட்ட ஒவ்வொரு கிலோ தேயிலைக் கொழுந்துக்கும் ஊழியர்களுக்கு 50 ரூபா வழங்கப்படும். இரண்டாவது வருவாய் பங்கு மாதிரி, இதன் மூலம் ஊழியர்கள் தொழில் முனைவோராக முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இலங்கை பெருந்தோட்ட துரைமார் சம்மேளனத்தின் செயலாளர் நாயகம், “தொழிற்சங்கங்கள் மணலில் ஒரு கோடு வரைந்து அதில் அவர்கள் கூறுவது, எமது தொழிலாளர்களுக்கு சிறந்தது என்னவென்றால், எந்தவொரு ஊக்கத் தொகையும் இல்லாமல் 1000 ரூபா அடிப்படை சம்பளம், தவறாமல் வேலைக்கு சமூகமளிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை.

இந்த செயல்பாட்டில் பல சலுகைகளை அவர்கள் நிராகரித்தனர். இவை ஒவ்வொன்றும் ஒரு நிலையான தினசரி ஊதியத்தை 1000 ரூபாவுக்கு மேல் வழங்குகின்றது. இந்த திட்டத்தை அரசியல் நலனுக்கு அப்பாற்பட்ட தோட்டத் தொழிலாளியின் சிறந்த நலனுக்காக பரிசீலிக்கும்படி தொழிற்சங்கங்களை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.

“உற்பத்தித் திறன் மாதிரிகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன், தொழிலாளர்களுக்கு நெகிழ்வான நேரங்கள் மற்றும் மேம்பட்ட தொழிலாளர் ஆகியவை பிற குடும்ப உறுப்பினர்கள் சம்பாதிக்கும் செயன்முறையிலும் பங்களிக்க முடியும். எமது தொழிலாளர்கள் எப்போது, எப்படி வேலை செய்கிறார்கள் என்பதைப் பற்றிச் சொல்வார்கள், மேலும் செயற்பாட்டில் அவர்களின் வருவாயை துரிதமாக மேம்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அரிசி விலைகள் மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

மஹவ – வவுனியா ரயில் பாதையை மறுசீரமைக்க திட்டம்

தேயிலை ஏற்றுமதியில் அதிகரிப்பு