உள்நாடு

ரஞ்சன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் [UPDATE]

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகளுக்கு எதிராக இடைக்கால உத்தரவு கோரி ரஞ்சன் ராமநாயக்க மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவினை மீளாய்வு செய்யுமாறு ரஞ்சன் மனுத்தாக்கல்

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மீளாய்வு செய்யுமாறு கோரியே அவர் உயர் நீதிமன்றில் தனது வழக்கறிஞர் மூலமாக அவர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி அலரி மாளிகைக்கு அருகில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, பெரும்பான்மையான நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என வெளியிட்ட கருத்துகளினூடாக நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதால், குற்றவாளியாக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அறிவித்து அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இடம்பெயர்ந்த வாக்காளர்களை பதிவிலிருந்து நீக்குவதற்கு எதிராக ரிஷாட் முறைப்பாடு

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

VAT மற்றும் உள்நாட்டு வருவாய் மசோதாக்களுக்கான 10 மனுக்கள்