கேளிக்கை

காத்து வாக்குல ரெண்டு காதல் : FirstLook வெளியானது

(UTV |  இந்தியா) – விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் ஏற்கனவே ‘நானும் ரவுடிதான்’ , ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் நடிக்க உள்ளனர் என்ற செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த படத்தில் நடிகை சமந்தாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி ஸ்டைலாக இருக்கும் கெட்டப்போடு போஸ்டரை வடிவமைத்துள்ளது படக்குழு.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜேம்ஸ் பொண்ட் காலமானார்

பிரபல ‘ராப்’ பாடகர் கிறிஸ் பிரவுன் கைது

ஒஸ்கர் விருது விழா ஒத்திவைப்பு