(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலத்தில் நாட்டில் 763 கொரோனா தொற்றாளர்கள் பதிவானதை தொடர்ந்து இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது.
பேலியகொடை கொத்தணி நெருங்கிப் பழகியவர்கள் 747 பேரும் சிறைச்சாலை கொத்தணியில் இருந்து 02 பேரும் உள்ளடங்குகின்றதாகவும், வெளிநாட்டில் இருந்து வருகை தந்தோரில் 14 பேர் (லெபனான் – 11, இஸ்ரேல் – 03) உள்ளடங்குகின்றதாகவும், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 53,062 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.