(UTV | இந்தியா) – சமீபத்தில் கோஹ்லி பெண் குழந்தை பிறந்துள்ளதால் விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) வீராட் கோஹ்லி தலைவராக உள்ளார்.
தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான கோஹ்லி, விளம்பரங்கள் மூலமும் அதிகம் சம்பாதித்து வருகிறார். இது தவிர இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் அவர் தனது வருவாயை பெருக்கிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் கோஹ்லி- அனுஷ்கா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
இதனையடுத்து பல்வேறு விளம்பர நிறுவனங்கள் அவரை மொய்த்துள்ளன. குழந்தைகளுக்குரிய பேம்பர்ஸ், ஷூ மற்றும் குளிர்பான நிறுவனங்கள் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.