(UTV | உகாண்டா) – உகாண்டாவில் பேஸ்புக் – வட்ஸ்ஆப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவில் ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், குறித்த சமூக ஊடகங்களைத் தடை செய்து அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இணையத்தள சேவை வழங்குபவர்களுக்கு அந்நாட்டு தகவல் தொடர்பு ஒழுங்குபடுத்தும் அமைச்சு மறு அறிவித்தல்வரை பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள், வட்ஸ்ஆப் உள்ளிட்ட குறுந்தகவல் செயலிகள் அனைத்தையும் தடை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளைத் தடுக்கும் முகமாக குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டினது ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්