உலகம்

அலிபாபாவின் ‘ஜாக்மா’ தொடர்பில் சீனா திடீர் திருப்புமுனை

(UTV | சீனா) – சீனாவின் மிகப் பெரிய தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா திடீரென காணாமல் போனதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஊடகங்களில் செய்திகள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஜாக்மா காணாமல் போன விவகாரம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சீன அரசுதான் அவர் காணாமல் போனதற்கு காரணமாக இருக்கும் என்ற குற்றச்சாட்டும் இருந்து வந்தது.

சீன அரசின் ஒரு சில விதிமுறைகளுக்கு ஜாக்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டு ஜாக்மா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், அதன் பின்னர்தான் அவர் திடீரென காணாமல் போனதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட அலிபாபா நிறுவனத்தின் ஜாக்மா பத்திரமாக உள்ளார் என்றும் ஆனால் அவர் இருக்கும் இடத்தை தற்போது வெளியிட முடியாது என்றும் சீன ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இதிலிருந்து அவரது உயிருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஜாக்மா வெளியே எப்போது வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு முதல் நபர் பலி

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ‘ஜோ பைடன்’

பெட்ரோல் டீசல் ஏற்றுமதிக்கு ரஷ்யா தற்காலிக தடை!