உலகம்

கொஞ்சம் ஸ்லோ ஆக இருக்கும் தடுப்பூசிகள் வேலை செய்யாது

(UTV |  ஜெனிவா) – பிரிட்டன் கொரோனா வகையைவிடத் தென் ஆப்பிரிக்க கொரோனா வகை வேகமாகப் பரவாது என்றாலும்கூட தடுப்பூசிகள் இவற்றுக்கு எதிராக வேலை செய்யாமல் போகலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகெங்கும் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் தினசரி சராசரியாக 50,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகளும் படிப்படியாக ஒவ்வொரு நாடுகளிலும் தொடங்கப்பட்டு வருகிறது.

குறித்த சூழ்நிலையில், பிரிட்டன் நாட்டில் கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் உருமாறிய கொரோனா வகை கண்டறியப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா அதிக ஆபத்தானது இல்லை என்றாலும் மற்ற வகைகளைவிட 70% வரை வேகமாகப் பரவும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை இந்த வகை கொரோனா 30க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதே காலகட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவும் இந்த வகை கொரோனா, இதுவரை ஐந்து நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்குப் பிறகு உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த மக்களுக்கு உருமாறிய கொரோனா வகைகளை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் வான்வெளி தாக்குதல்

டிக் டாக் : மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆய்வு

கல்வான் பள்ளத்தாக்கு மோதல் – முதல் முறையாக சீனா ஒப்புதல்