உலகம்

பைடனின் பதவியேற்புடன் பழிவாங்கல் தொடரும்

(UTV | ஈரான்) – காசெம் சோலைமானியின் படுகொலைக்கு பழிவாங்க ஈரான் இதுவரை தவறிவிட்டதாகவும், அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனின் பதவியேற்பு வரை ஈரான் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்க வாய்ப்பில்லை என்று இரு முன்னாள் மொசாட் தலைவர்களும், முன்னாள் தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவரும் கூறியுள்ளதாக ஜெருசலேம் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதி (ஐ.ஆர்.ஜி.சி) ஜெனரல் காசெம் சோலைமானி அமெரிக்காவின் ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் ஏற்கனவே வலுவிழந்த உறவுகளை மோசமாக்கியதுடன், சோலைமானியின் ஓராண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு ஈரான் பழிவாங்கக்கூடும் எனவும் ஊகங்கள் வெளியான இந்நிலையிலேயே மொசாட்டின் முன்னாள் தலைவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் ஈரானியர்களின் பொறுமை ஒருபோதும் முடிவடையாது என்றும் பைடனின் பதவியேற்பின் பின்னர் அவர்கள் பழிவாங்கக்கூடும் என்றும் மொசாட்டின் முன்னாள் பணிப்பாளர் ஷப்தாய் ஷாவிட் எச்சரித்துள்ளார்.

நவம்பர் மாதம் ஈரான் இராணுவ அணுசக்தி திட்டத்தின் தலைவர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதோடு, 2020 ஜனவரியில் சோலைமணி கொல்லப்பட்டதும் “மத்திய கிழக்கில் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான இரட்டை அடியாகும்” என்று ஷாவிட் தெரிவித்துள்ளார்.

Related posts

பங்களாதேஷினை சுழற்றும் கனமழை

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது.

editor

உலகளவில் 54 இலட்சத்தை தாண்டிய கொரோனா நோயாளிகள்