உள்நாடு

உக்ரைன் சுற்றுலா பயணிகளின் வருகை – சில சுற்றுலா தலங்களுக்கு பூட்டு 

(UTV | கொழும்பு) –  இலங்கைக்கு வருகை தந்துள்ள உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் பொலன்னறுவை மற்றும் சிகிரியாவை அண்மித்த பகுதிகளில் சுற்றுலா மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளமையினால் உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இன்று(04) மற்றும் நாளை (05) இவர்கள் குறித்த பகுதிகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளதால் இன்று பிற்பகல் 1 மணி முதல் பொலன்னறுவையில் 04 சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு பயணிகள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.,

அதேபோன்று, நாளை நண்பகல் 12 மணி முதல் சிகிரியா சுற்றுலா வலயத்திலும் உள்நாட்டு பயணிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘ஸ்பூட்னிக் வி’ : 3ம் கட்ட ஆராய்ச்சி ஆரம்பம்

இதுவரை கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்ட விபரம்

சம்பாயோ உட்பட 4 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்