(UTV | கொழும்பு) – கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதால் எவ்வித சிக்கலும் ஏற்படாதென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
விசேட வைத்திய நிபுணர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தாம் இந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து விரைவில் தெளிவுப்படுத்தல்களை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் அரசு தனது நிலைப்பாட்டினை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.