(UTV | கொழும்பு) – விஞ்ஞானபூர்வமான முறைப்படி கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுளள்து.
நிபுணர்கள் முறைப்படி கொவிட் – 19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொவிட் தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி பணியகத்தின் பணிப்பாளர் டொக்டர் பாலித்த கருணாபேம தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்கு, மீள் பரிசீலனை செய்து கொண்டு நடவடிக்கை முன்னெடுத்து செல்ல வேண்டியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்காவில் புதிதாக இனங்காணப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ், ஏனைய வைரஸை விட 50 வீத வேகத்தில் பரவக்கூடியது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழத்தின் பேராசிரியர் நீலகா மலவிகே இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්