உள்நாடு

வெளிநாட்டுப் பணியாளர்கள் முறைப்பாடுகளை பதிவு செய்ய புதிய வசதி

(UTV | கொழும்பு) –  வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணையத்தளம் ஊடாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் உள்ள பணியாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருப்பின் www.slbfe.lk என்ற இணையத் தளத்தின் ஊடாக முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களின் பயணச்சீட்டு இலக்கம், பெயர், தொலைபேசி இலக்கம் மற்றும் முறைப்பாடுகளை இதன் ஊடாக பதிவேற்ற முடியும்.

முறைப்பாடு தொடர்பான இலக்கமும் அந்தத் தருணத்தில் கையடக்கத் தொலைபேசிக்கு SMS ஊடாக கிடைக்கப்பெறும் எனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

HNDA மாணவர்களது எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்

ஸ்பா வில் இருந்து சடலம் மீட்பு

பிரபல சிங்கள அரசியல்வாதியால் பறிபோன இளைஞனின் உயிர்!