உள்நாடு

முடங்கியது காத்தான்குடி

(UTV | காத்தான்குடி ) – காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு இன்று(31) முதல் எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு முடக்கப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் களுக்கு நேற்று(30) மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது, 26 பேர் கொரோனா தொற்றாளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற்கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின்போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டுக்கு ரணிலின் வெற்றி அவசியம் – அமைச்சர் டக்ளஸ்

editor

விமர்சனத்தைப் போலவே வேலையும் செய்ய வேண்டும் – சஜித்

editor

கிஹான் பிலபிட்டிய மீதான விசாரணை அறிக்கையை ஆராய 5 பேர் கொண்ட குழு நியமனம்