உலகம்

செயற்கை இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அனுமதி

(UTV | சிங்கப்பூர் ) – கோழியாக உருவாகாமல் ஆய்வகத்திலேயெ இறைச்சியாக தயாரிக்கப்படும் செயற்கை இறைச்சி விற்பனைக்கு சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுவதும் இறைச்சி உணவுகளுக்கு பெரும் தேவை ஏற்பட்டுள்ள நிலையில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளும் அதிகமாக தேவைப்படுகின்றன. அவற்றை முட்டையிலிருந்து குஞ்சு பொறித்து தீவனம் வைத்து கறிக்கோழியாக மாற்றி விற்பதற்கு பல நாட்கள் பிடிக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஈட் ஜஸ்ட் என்ற நிறுவனம் கோழியின் செல்களை கொண்டு ஆய்வகத்திலேயே செயற்கையாக இறைச்சியை தயாரித்துள்ளது. இது கோழியாக உருவான பின் வெட்டி இறைச்சி எடுப்பது போல இல்லாமல் இறைச்சியாகவே உருவாகும்.

இந்த வகை இறைச்சியை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் உலகிலேயே முதன்முறையாக சிங்கப்பூர் அனுமதி அளித்துள்ளது.

Related posts

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்

இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீடிக்கும் வாய்ப்பு!