உள்நாடு

விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் தொடர்பில் விசாரணை

(UTV | கொழும்பு) – உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் நேற்று ஒருகொடவத்தை கொள்கலன் களஞ்சியசாலையில் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தநிலையில், நேற்றையதினம் குறித்த கொள்கலன்கள் பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவற்றில் விவசாய கழிவுகள் இருந்தமை கண்டறியப்பட்டது.

எவ்வாறாயினும், இந்தக் கொள்கலன்களில் கொத்தமல்லி இருப்பதாக ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த கொள்கலன்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அவற்றை மீளவும் உக்ரைனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

உரப் பிரச்சினைக்கு இந்தியாவிடமிருந்து உறுதிமொழி

“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

6ஆம் திகதி விவாதம் – திகதியை ஏற்றுக்கொண்ட அனுர