(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படும் என, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்துக்கு வெளியில் கொவிட் 19 (கொரோனா) பரலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஹங்வெல்ல, இங்கிரிய, நிட்டம்புவ, மீரிகம, தொம்பே, நீர்கொழும்பு-கொச்சிகடை, கொட்டதெனியாவ, அளுத்கம, தினியாவல, மிகஹாதென்ன, பதுரலிய ஆகிய இடங்கள் உள்ளடங்குகின்றன.