உலகம்

தென்னாபிரிக்காவிலும் புதிய வகை கொரோனா

(UTV | தென்னாபிரிக்கா) –  தென்னாப்பிரிக்காவிலும் புதிய வகையான கொரோனா வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அங்கிருந்து வரும் பயணிகளுக்கு சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன.

இதேவேளை, பிரிட்டனில் இருந்து டிசம்பர் 22 முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை பயணிகள் வருகைக்கு 40க்கும் அதிகமான நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், டென்மார்க் நாட்டில் புதிய வகை வைரஸ் காணப்பட்டதாக வெளியான தகவலைத் தொடர்ந்து அந்நாட்டுடனான போக்குவரத்தை ஸ்வீடன் நாடு நிறுத்திக் கொண்டுள்ளது.

குறித்த இந்த புதிய வகை வைரஸ் ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக கருதப்பட்டாலும், அது உயிர்க்கொல்லி ஆகும் அளவுக்கு தீவிரமானது என்பதை நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சர்வதேச சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

புதிய வகை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை ஒருங்கிணைந்து சீரான முறையில் எடுப்பது தொடர்பாக 27 ஐரோப்பிய உறுப்பு நாடுகளும் ஆலோசனை நடத்தி வருகின்றன.

கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவில் வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்படும் பயணிகளை மட்டும் தற்போதைக்கு அனுமதிப்பது குறித்து அந்த நாடுகள் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சிரியா மற்றும்பொலிவியாவில் பதிவானது முதல் மரணம்

மியன்மார் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 50 தொழிலாளர்கள் பலி

உயிரிழந்த நடிகை பூனம் பாண்டே!