(UTV | கொழும்பு) – இன்று(21) காலை 5 மணி முதல் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், சில பகுதிகள் புதிதாக தனிமைப்படுத்தப்படுவதாகவும் இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று(21) அதிகாலை 05 மணி முதல் சில பகுதிகளில் அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு மற்றும் வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவின் கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலப்பிட்டிய – நைதூவ பகுதி, பேலியகொடை பொலிஸ் பிரிவின் கங்கபட கிராம சேவகர் பிரிவு மற்றும் கிரிபத்கொடை பொலிஸ் பிரிவின் விலேகொட வடக்கு கிராம சேவையாளர் பிரிவு ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தல் தளர்த்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්