உலகம்

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – மின்சார சேவைகள் துண்டிப்பு

(UTV | ஜப்பான் ) –  ஜப்பானில் வடக்குப் பகுதி நகரங்களில் ஏற்பட்ட கடும் பனிப் பொழிவினால் 0 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புதன்கிழமை மலை தொடங்கிய இந்த பனிப் பொழிவானது மற்றொரு அதிவேக நெடுஞ்சாலையில் சுமார் 200 வாகனங்களும் கடும் பனியில் சிக்கிக் கொண்டுள்ளன.

புயலின் பெரும்பகுதி நைகாட்டா மற்றும் குன்மா மாகாணங்களை மையமாகக் கொண்டிருந்தது. இது மூன்று நாட்களில் சுமார் 6 அடி பனிய‍ை பொழிந்துள்ளது.

ஜப்பானின் கிழக்கு, மத்திய மற்றும் கடலோரப் பகுதிகளில் அதிக பனிப் பொழிவு மற்றும் பனிச்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அந் நாட்டு வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை!

தொடர்ந்தும் பலஸ்தீனை குறிவைக்கும் ஜெருசலேம்