உள்நாடு

படைப் புழுவை கட்டுப்படுத்த கிருமிநாசினி அறிமுகம்

(UTV | கொழும்பு) –  சோளப் பயிர்ச் செய்கையை சேதப்படுத்தும் சேனா படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு என்.ஜி.வி எனும் கிருமிநாசினி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி எம்.டபிள்யு.எம்.வீரகோன் தெரிவித்துள்ளார்.

ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கைகளின் பின்னர் இந்த கிருமிநாசினி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

மொனராகலை, அம்பாறை, அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் அதிகளவில் சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

படைப்புழு தாக்கத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும், காப்புறுதியாளர்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதுடன், சேதமடைந்த பயிர்களை மதிப்பீடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 11 பேர் வெளியேறினர்

பொதுமக்கள் பார்வைக்கூடம் தற்காலிகமாக பூட்டு