உள்நாடு

கொவிட் நிலைமைக்கு அமைவாக எதிர்கால தீர்மானங்கள்

(UTV | கொழும்பு) –  தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் நிலைமைக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால தீர்மானங்கள் தொடர்பில் 22ஆம், 23ஆம் திகதிகளில் அறிவிக்கப்படும் என இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமைக்கு அமைவாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு அல்லது தனிமைப்படுத்தலை மேற்கொள்வதற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், எதிர்வரும் 22ஆம், 23ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள கொவிட் நிலைமைக்கு அமைவாக தீர்மானங்கள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ராஜபக்ஷ அரசுடன் எவ்வித கணக்குகளையும் நாம் வைத்துக் கொள்ளவில்லை [VIDEO]

ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் குறித்து பகுப்பாய்வு ஆரம்பம்

மத்திய கிழக்கு, சீன மற்றும் இந்திய இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்