(UTV | நெதர்லாந்து ) – நெதர்லாந்தில் கடுமையான ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்ததைத் தொடர்ந்து பண்டிகை காலங்களில் கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்தப்போவதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது.
இதனையடுத்தது மக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வேலைக்குச் செல்லக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பகல்நேர பராமரிப்பு நிலையங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், சினிமா திரையரங்குகள், சிகையலங்கார நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் உட்பட அனைத்து பொது இடங்களும் ஜனவரி 19 ஆம் திகதி வரை மூடப்படுகிறது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්