(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை 34,737 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நேற்று (16) 616 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 வைரஸ் கட்டுப்பாட்டிற்கான தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் ஐவர் வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகை தந்தவர்களாவர்.
கொழும்பு மாவட்டத்தில் 266 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 94 பேரும் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை. நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த 160 ஆக அதிகரித்துள்ளன.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්