உள்நாடு

MCC உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானம்

(UTV | கொழும்பு) –  மிலேனியம் கோப்பரேஷன் உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

MCC எனப்படும் மிலேனியம் செலஞ்ச் கோப்பரேஷன் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதற்கமைய 5 வருட காலத்திற்காக இலங்கைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இரத்து செய்யப்படவுள்ளது.

இந்த நிலையில், MCC எனப்படும் மிலேனியம் செலஞ்ச் கோப்பரேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் சபையின் காலாண்டு கூட்டம் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையுடனான உடன்படிக்கையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமூர்த்தி அதிகாரிகளும் அரசுக்கு எச்சரிக்கை

வில்பத்து வழக்கு: ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு!

🛑 Breaking News : வென்றார் சபாநாயகர் (VIDEO)