உள்நாடு

தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புக்கள் குறித்த அறிவித்தல்

(UTV | கொழும்பு) –  கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தொடர்மாடி குடியிருப்புகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தொடர்மாடிகளில் உள்ள வீடுகளில் PCR பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை விரைவுபடுத்தியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு – 15 முகத்துவாரம் மற்றும் மட்டக்குளி ஆகிய பகுதிகளில் சுமார் 14 தொடர்மாடி குடியிருப்புகள் 06 வாரங்களுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய இந்த தொடர்மாடி குடியிருப்புகளை விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் – இறுதித் தீர்மானம்

அதிகாரப் பகிர்வு தொடர்பில் கதைப்பதற்கு முன்னர் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் –

டொலரின் பெறுமதியில் வீழ்ச்சி!