(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கைப் பிரஜைகள்,14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் நடவடிக்கையை அகற்றுவது குறித்து கவனம் செலுத்தி வருவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்
நாடு திரும்பும் இலங்கையர்ள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையத்தில் அவர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
மீண்டும் வீடு திரும்புவர்கள் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு தொடர்ச்சியாக 28 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் நிலைமையை குறைப்பதற்கு எதிர்பார்கின்றோம் எனவும் மக்களுக்கு இலகுவான வழியை ஏற்படுத்த உத்தேசித்துள்ளோம் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්