உள்நாடு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான இறுதி அறிக்கை கையளிப்பு

(UTV | கொழும்பு) –  அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணைகலை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை, ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்னவினால் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மூன்று அத்தியாயங்களாக அச்சிடப்பட்டுள்ள இந்த அறிக்கை 2000 பக்கங்களைக் கொண்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அரச மற்றும் தனியார் கூட்டு நிறுவனங்களில் இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்ந்து தகவல்களை திரட்டுவதற்காக இந்த ஆணைக்குழு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நியமிக்கப்பட்டது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இடைநிறுத்தம்

நாட்டிற்கு ஏற்ப்பட்டுள்ள புதிய சவால்!

அரசு தவறினால் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டம்