விளையாட்டு

LPL : கொழும்பு கிங்க்ஸ் எதிர்பாரா வெற்றி

(UTV | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் தொடரின் 4 ஆவது போட்டியில் கொழும்பு கிங்க்ஸ் அணி 34 ஓட்டங்களினால் எதிர்பாராத வெற்றியை பதிவு செய்தது.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக ஐந்து ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் நாணய சூழற்ச்சியில் வெற்றிப்பெற்ற காலி க்லேடியேற்றர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்க்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 96 ஓட்டங்களை குவித்தது.

கொழும்பு கிங்க்ஸ் அணிக்காக அன்ட்று ரஸ்ஸல் 19 பந்துகளில் 65 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தார்.

இந்த நிலையில் 97 என்ற இமாலய வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி க்லேடியேற்றர்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து 62 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.

மேலும். கொழும்பு கிங்க்ஸ் அணிக்காக அஷான் ப்ரியஞ்சன் சிறப்பாக 6 பந்துகள் வீசி மூன்று ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

இது கொழும்பு கிங்க்ஸ் அணியின் வெற்றியை மேலும் உறுதி செய்தது.

அத்துடன் இந்த போட்டியின் ஆட்டநாயகனாக அன்ட்று ரஸ்ஸல் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில். இரண்டு பேட்டிகளில் வெற்றி பெற்றுள்ள கொழும்பு கிங்க்ஸ் அணி நான்கு புள்ளிகளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது.

இதேவேளை. லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் 3 ஆவது போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் தம்புள்ளை வைக்கிங் அணி வெற்றிப் பெற்றது.

இந்த போட்டியில் கண்டி டஸ்கர்ஸ் மற்றும் தம்புள்ளை வைக்கிங் ஆகிய அணிகள் நேற்று மாலை பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் நாணய சூழற்ச்சியில் வெற்றிப்பெற்ற கண்டி டஸ்கர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை வைக்கிங் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 195 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

தம்புள்ளை வைக்கிங் அணிக்காக தசுன் ஷானக 74 ஓட்டங்களையும், சமித் படேல் 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்த நிலையில் 196 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் கண்டி டஸ்கர்ஸ் அணி சற்று முன்னர்வரையில், .9 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் மழை குறுக்கிட்டது.

இந்த நிலையில், டக்வத் லூயிஸ் முறையில் தம்புள்ளை வைக்கிங் அணி வெற்றிப் பெற்றதாக அறிவிக்கபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யா – உக்ரேன் மோதல் : சர்வதேச பராலிம்பிக் குழுவின் அதிரடி அறிவிப்பு

இலங்கை வீரர்கள் வரலாற்று சாதனை

சச்சித்ர சேனாநாயக்க பிணையில் விடுதலை!