உள்நாடு

கடந்த 24 மணி நேரத்தில் 2 மரணங்கள் : 487 தொற்றாளர்கள்

(UTV | கொழும்பு) – நாட்டில் இதுவரை கொவிட்19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுறுதியானவர்களில் மேலும் இரண்டு பேரின் உயிரிழப்பு நேற்று பதிவாகியது.

கொழும்பு 02 பகுதியை சேர்ந்த 76 வயதான ஆண் ஒருவர் கடந்த 26ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் உயர் குருதி அழுத்தம் மற்றும் நீண்டகால சிறுநீரக நோய் கொவிட் 19 தொற்றினால் தீவிரமடைந்தமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு – 08 பகுதியை சேர்ந்த 96 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் ஆஸ்துமா, கொவிட் 19 உடன் நிமோனியா நோய் நிலமையாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தை மேற்கோள்காட்டி அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் ஏற்பட்ட கொவிட்19 இரண்டாம் அலையில் இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

Image may contain: text that says "රජයේ ප්‍රවෘත්ති දෙපාර්තමේන්තුව அரசாங்க தகவல் திணைக்களம் Departmentof Government Information பணிப்பாளர் (செய்தி) செய்தி ஆசிரியர் 2020.11.29 ஊடக அறிக்கை இலக்கம் 480 2020 நேரம் 22.30 (28.11.2020) அறிக்கை கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் இருவரின் மரணம் இடம்பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் நாயகத்தினால் முன்னர் அத்தோடு இதற்கமைவாக, இலங்கையில் மொத்த நோயாளர்களின் மரண எண்ணிக்கை 01. கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 26ஆம் கொழும்பு உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் சிறுநீரக நோய் கொவிட் தொற்றினால் மோசமடை தொற்றுக்குள்ளான ஆண் நபர். 2020 நவம்பர் மாதம் வேளையில் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட என தெரிவிக்கப்பட்டுள்ளது. 02. கொழும்பு 08 பிரதேசத்தைச் சேர்ந்த வயதான பெண். 2020 நவம்பர் மாதம் 27ஆம் திகதி வீட்டில் யிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் ஆஸ்துமா நோயுடன் கொவிட் நிமோனியா ஏற்பட்டமை என நாலக கலுவெவ அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் 11)2515759 www.news.lk"

இவ்வாறு இரண்டாம் அலையில் பதிவான உயிரிழப்புகளில் அதிகமானோர் 60 வயதுகளுக்கு மேற்பட்டோர் என கொவிட்19 ஐ தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 தொற்றாளர்ளாக நேற்று(28) 487 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் நாட்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,988 ஆக அதிகரித்துள்ளதுடன், தொற்றிலிருந்து 16,656 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அத்துடன் 6,223 பேர் தொடர்ந்தும் வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடன் மறுசீரமைப்பிற்காக அமெரிக்காவை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனத்தை இலங்கை நாடுகிறது

இஸ்லாமிய அமைப்புக்களை தடை செய்யும் அதிவிசேட வர்த்தமானி

நிதியுதவியின் கீழ் நவீன ரயில் பெட்டிகள்