(UTV | கொழும்பு) – நாட்டில் புதிய சுகாதார வழிகாட்டல்களின் கீழ் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் நாடு வழமை நிலைக்கு திரும்பவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன்ட் சவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவுகின்ற போதிலும் தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முறை உள்ளடக்கப்பட்ட புதிய கொள்கையினை தயாரித்து சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அதிக ஆபத்து, அவதானமிக்க மற்றும் சாதாரண இடங்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான சுகாதார வழிக்காட்டி ஒன்று அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் செயற்பாடு, பாடசாலை உட்பட கல்வி நிறுவனங்களின் நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் செயற்படுத்தும் முறைகளும் அந்த சுகாதார வழிக்காட்டியில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டுள்ளார்.
அதில் முழுமையான மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்ற நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி நோக்கி கொண்டு செல்லும் வகையில் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது வரையிலும் நாட்டின் வழமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து நிறுவனங்களின் நபர்களினால் செயற்பட வேண்டிய முறை தொடர்பில் இந்த சுகாதார வழிக்காட்டியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதென இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.