உள்நாடு

ஜனக பண்டாரவுக்கு எதிரான வழக்கு இரத்து

(UTV | கொழும்பு) –  1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களை மேன் முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

கண்டி மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளையே மேல் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

1999 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவமொன்றுடன் தொடர்பில், 2015 ஆம் ஆண்டில், நல்லாட்சி அரசாங்கத்தினால் தனக்கு எதிராக கண்டி மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், ரிட் மனுவின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப் பத்திரிகை, சட்டத்திற்கு முரணானது எனவும், அதனால் குற்றப்பத்திரிகையை செல்லுபடியற்றதாக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையிலேயே, குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சாதாரண தர பரீட்சையில் மாணவர்களின் முறைகேடு – விசரணைகள் ஆரம்பம்

தொழில் திணைக்களத்தின் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்களுக்கு வழங்கப்படும் டீசலின் அளவில் இரட்டிப்பு