(UTV | கொழும்பு) – பேலியகொட மெனிங் சந்தை இன்று(20) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த புதிய சந்தை நிர்மானிக்கப்பட்டுள்ளதுடன், இதில் 600 வாகனங்களை நிறுத்தக்கூடிய வசதிகளை கொண்ட வாகன தரிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் உள்ளதுடன், ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், குளிரூட்டல் அறைகள், வங்கி வசதிகள் உட்பட பல வசதிகளும் இந்த சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வர்த்தக கட்டிட செயற்திட்டத்திற்காக 6.9 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්