(UTV | இந்தியா) – லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு விக்னேஷ் சிவன் உள்பட மொத்த திரையுலக பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை நயன்தாரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். நேற்று அவருக்கு மலையாளபடம் ஒன்றின் படப்பிடிப்பு என்பதால் படப்பிடிப்பு தளத்திலேயே அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வரும் நிலையில் இந்த பிறந்தநாள் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் விக்னேஷ் சிவன்.
View this post on Instagram