(UTV | கொழும்பு) – பேலியகொட மீன் சந்தையை திறந்த பின்னர் ஆன்லைன் (Online) பண மாற்றம் செய்வது தொடர்பில் மீன்பிடி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
பேலியகொட மீன்பிடி சந்தையில் பணத்தாள் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக தகவல் வெளியாகியிருந்தது.
இதனால் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் கடைகளை திறப்பதற்காக அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் பேலியகொட மீன் சந்தை திறக்கப்பட்டு பின்னர் இந்த இணைய முறை முன்னெடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்காக வங்கி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.