(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் பல பகுதிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து சேவைகளும் குறைந்த அளவிலேயே இடம்பெற்று வருகின்றன.
பயணிகள் பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்துவது குறைந்துள்ளமையினால் 50 மில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
அத்துடன் கொவிட் 19 இரண்டாவது அலை காரணமாக இதுவரை மொத்தமாக 520 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் நாடளாவிய ரீதியில் சேவைகளில் ஈடுபடும் 4000 பேருந்துகளில் தொற்று நீக்கிகளை வைப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.