உலகம்

ஹாங்காங்- ஜனநாயக ஆதரவு உறுப்பினர்கள் 4 பேர் இராஜினாமா

(UTV | ஹாங்காங்) –  ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பேரவை உறுப்பினர்கள் 04 பேர், அவர்கள் வகித்து வரும் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த பிராந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சீன நாடாளுமன்ற நிலைக்குழு தீர்மானம் நிறைவேற்றியது.

சிவில் கட்சியைச் சேர்ந்த ஆல்வின் இயூங், க்வொக் கா கீ, டென்னிஸ் க்வொக், ப்ரொஃபெனல்ஸ் கில்ட் கட்சியின் கென்னத் லியூங் ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஹாங்காங்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கடந்த ஜூலை மாதம் சீன மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முன்னதாக, அத்தகைய சட்டத்தை கொண்டு வர ஹாங்காங் தலைமை நிர்வாகி கேரி லாம் ஆதரவாக இருந்தபோது அவருக்கு எதிராக கடுமையாக போராட்டங்கள் வெடித்தன. எட்டு மாத போராட்டங்கள் காவல்துறையின் கடும் நடவடிக்கை மூலம் அமைதிப்படுத்தப்பட்ட நிலையில், அவ்வப்போது ஜனநாயக ஆதரவு குரல்களை சில செயல்பாட்டாளர்கள் ஹாங்குக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தவாறு எழுப்பி வருகின்றனர்.

தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நால்வர் உட்பட 12 உறுப்பினர்கள் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள பேரவை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி

நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை மேலும் இரு நாடுகள் உறுதி செய்தது

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு