உள்நாடு

40ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

(UTV | கொழும்பு) –  மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 51 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதன்படி, கட்டாரின் தோஹாவில் இருந்து 31 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளதுடன், ஓமான் -மஸ்கட் நகரில் இருந்து 20 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த அனைவரும் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 17,861 பேர் உள்ளிட்ட 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுநோய்ப் பரம்பலை அடுத்து, இவர்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

கொவிட் 19 தொற்றுநோயின் முதலாம் அலை தாக்கிய சமயம், பிரத்தியேக இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களின் தகவல்கள் திரட்டப்பட்டன.

தற்போது, வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளில், கொவிட்-19 நெருக்கடியால் வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

UNP பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அகில விராஜ் காரியவசம் இராஜினாமா

உர மானியத்தை வழங்கும் பணிகள் இன்று முதல் – அமைச்சர் விஜித ஹேரத்

editor

நாளை இரவு 9.30 மணி வரை பாராளுமன்றத்தை நடந்த தீர்மானம்

editor