விளையாட்டு

ஜேம்ஸ் : கொரோனா உறுதி

(UTV | இங்கிலாந்து) – இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் வின்ஸ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற இங்கிலாந்து அணியில் 29 வயது ஜேம்ஸ் வின்ஸ் இடம்பெற்றிருந்தார். 13 டெஸ்ட், 16 ஒருநாள், 12 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

நவம்பர் 14 முதல் தொடங்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின் பிளேஆஃப் ஆட்டத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணிக்காக விளையாட இருந்தார் வின்ஸ். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகம் என அறியப்படுகிறது.

அறிகுறிகள் எதுவும் இல்லாத நிலையில் வின்ஸ் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். பிக் பாஷ் டி20 லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். அந்தப் போட்டி தொடங்க ஒரு மாதம் இருப்பதால் அதில் கலந்துகொள்வதில் சிக்கல் ஏற்படாது எனத் தெரிகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தெரிவுக் குழு நியமனம்

லங்கா பிரிமியர் லீக் ஒத்திவைப்பு

வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீபாலி உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு