(UTV | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது இதன்போது 18 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இதுவரை 2,532 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,382 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, முகக் கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறிய 96 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්